Home Srilanka தனிமைப்படுத்தல் குறித்த தீர்மானத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வரவேற்பு!

தனிமைப்படுத்தல் குறித்த தீர்மானத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வரவேற்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்களை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானத்தை வரவேற்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது.

தற்போது நாடு மிகமோசமான தொற்றுநோயொன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர்களின் சுதந்திரத்தையும் விரும்பிய இடங்களுக்குப் பயணிப்பதற்கான இடைவெளியையும் கட்டுப்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளமையை அங்கீகரிப்பதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டிருக்கிறது.

எனினும் கொரோனா வைரஸ் மிகவேகமாகப் பரவிவருவதனால் பெருமளவானோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிவதுடன் தனிமைப்படுத்தலின் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருக்கிறது.

எனினும் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை முறைமைப்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சுகாதார அமைச்சிற்கும் கொவிட் – 19 பரவலைத் தடுப்பதற்கான மத்திய நிலையத்திற்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன

‘கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்கள் ஆரம்பத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். எனினும் தற்போது அவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானத்தை நாம் பெரிதும் வரவேற்கின்றோம்’ என்று மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -