Home Spiritual "தியானமும் ஆன்மீக வாழ்வும்"- மகா யோகியின் ஞான உபதேச தொகுப்பு!

“தியானமும் ஆன்மீக வாழ்வும்”- மகா யோகியின் ஞான உபதேச தொகுப்பு!

காலம் உணர்த்தும் ஞானத்தால் இறைவன் காலமெல்லாம் வீற்றிருக்கிறார் என்பதனை தற்போது உலக மக்கள் உணர்ந்து வருகிறார்கள்.

அடிக்கடி துன்பம் வரும் போது மனிதர்கள் அதனை வென்று இன்பமான வாழ்க்கையினை வாழ வேண்டும் என்ற அவாவினால் உந்தப்படுகிறார்கள் அந்த உந்துதலினால் மனித சக்திக்கும் மேலான மாபெரும் சக்தி தன்னையும் இப் பிரபஞ்சத்தினையும் இயக்குகிறது என்பனை மெல்ல மெல்ல உணரத்தலைப்படுகிறார்கள்.

இவ்வாறு உணரும் நிலையேற்படும் போது அந்த பேரின்ப வாழ்க்கை வாழுவதற்கு அவர்கள் எவற்றையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் எனும் வாழ்வியல் முறை அறியாமல் “இதைச் செய்து பார்ப்போம், அதைச் செய்து பார்ப்போம்” என்று தத்தம் மனம் போனபோக்கில் பல காரியங்களை செய்து அவை எதுவும் வெற்றியளிக்காமல் மீண்டும் துன்பத்தையே வழங்கும் போது வாழ்க்கை என்பது துன்பமானதுதான் இனி இதற்கு மேல் எதுவும் இல்லை இப்படியே வாழ்ந்து விட்டுப் போவோம் என மன விரக்தியுற்று வாழ்க்கையினை பிடிப்பற்ற நிலையில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் சிலர் இந்த துன்பத்திற்கு காரணம் என்ன? இதிலிருந்து விடுபட வழியே இல்லையா! என்று சிந்திக்கிறார்கள் அந்த சிந்திப்பின் வழியே அவர்களது மனது தெளிவு நிலையினை அடையும் தருணத்தில் இன்பமான வாழ்க்கையினை வாழக்கூடிய வழிகள் தென்பட ஆரம்பிக்கும் இருந்தும் அவை சரியான பாதையா? பிழையான பாதையா? எனும் இரண்டும் கெட்ட நிலையில் மனப் போராட்டம் அவர்களுக்குள்ளாகவே நிகழ்ந்து கொண்டிருக்கும் போது இவ்வாறான பல போராட்டங்கள் நிறைந்த வாழ்வினை வெற்றி கண்ட ஒருவருடைய அனுபவங்கள் அவர் வாழ்ந்த வாழ்க்கை முறைகள் பற்றிய தேடல் அவர்களுக்கு உண்டாகும் சந்தர்ப்பத்தில் அவ்வாறான ஒருவர் அவர்களது போராட்டமான வாழ்விற்கு முற்றுப் புள்ளி வைத்திட உலகில் எங்காவது ஒரு மூலையில் இருந்தே ஆகுவார்.DSC 0064

அல்லது அவர்களை தேடி அவரே வருவார் சில நேரங்களில் அப்பேற்பட்ட ஒருவர் நம் அருகிலேயே இருந்து வழிகாட்டிக்கொண்டிருப்பார் ஆனால் அவர்களை இனங்காண்பதற்கும் அவர்களது வழிகாட்டல்களை பின்பற்றுவதற்கும் ஒரு பிராப்தம் வேண்டும் இல்லையேல் அவர்கள் அருகில் இருந்தாலும் அவர்களை மனிதர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள் அவ்வாறு அவர்களை இனங்கண்டு கொள்பவர்கள் வெற்றியாளர்களாக திகழ்வார்கள் என்பது வரலாற்று உண்மையும்கூட.

மேலே கூறப்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு “தியானம் பற்றியும் அதனை ஆன்மீக வாழ்வாக எவ்வாறு கடைப்பிடிப்பது என்பது பற்றியுமான மிகத் தெளிவான விடயங்களை விபரமாக அகஸ்தியப் பெருமானின் வழித் தோன்றலில் கண்ணையா யோகி மகரிஷி, காயத்திரி சித்தர் பகவான் முருகேசு சுவாமிகள், என மூன்று தலைமுறைகளை கடந்து நான்காவது தலைமுறையின் ஆன்மீக குருவாக இருந்து உலகம் உய்வு பெற எந்த பிரதி பலனையும் எதிர்பாராமல் தாம் மேற்கொண்ட தெய்வீக ஞானப் பணியினை எந்த இடையூறு, தடைகளின்றி ஜாதி, மதம், இனம், மொழி வேற்றுமைகளை கடந்து ஞான வழிகாண்பித்துக் கொண்டிருக்கும் மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் அருளப்பட்ட தெய்வீக அருள் நிறைந்த உபதேசத்தினை தொகுத்து வழங்குகிறோம்.DSC 0650

“ஐந்து பேர் வாழ்கின்ற வீடு அறிவான பொருள் ஒன்றைத் தேடு பஞ்சு போல் பறந்திடும் வாழ்க்கை நாளை பாரி எமன் வந்தால் காடு” என்று சுமார் 385 வருடங்கள் இவ்வுலகில் வாழ்ந்து வழி காண்பித்த மகா ஞானி ஞானாநந்தகிரி சுவாமிகள் இவ்வாறு கூறியுள்ளார் ஐந்து பேர் என்று பஞ்ச புலன்களை குறிப்பிட்டு வீடென்று மனித உடலைக் குறிப்பிட்டு அவ் வீட்டிலே நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழுவதற்கு அறிவெனும் பொருளான ஞானத்தை தேடிப் பெற்றிடுங்கள் அவ்வாறில்லையேல் பஞ்சினைப் போன்ற வாழ்வானது நொடியில் பறந்து போய் விடும் அங்கே நம் உயிரினை எமதர்மராஜன் கொண்டு போய் விட்டால் உடலானது சுடுகாட்டிற்கு சென்று விடும் என்கிறார்.

உலகில் பிறப்பெடுத்த அனைவரும் இறப்பென்ற ஒன்றை சந்தித்தே ஆக வேண்டும் என்பது பிரபஞ்சத்தின் நியதி ஆனாலும் அந்த இறப்பினை இந்தப் பிறவியோடு இல்லாதொழித்து பிறப்பு இறப்பு அற்ற நிலையான முக்தியின்பத்தினைப் பெற்றவர்களே ஞானிகள், யோகிகள், சித்தர்கள், மகரிஷிகள் என்று அழைக்கப்படுகிறார்கள் அவர்கள் மரணத்தின் போதான மரண வேதனையினை வென்று பிறப்பினை அறுத்து பிறவாப் பேரின்ப நிலையடைந்தவர்கள் அவர்கள் தாம் வாழ்ந்த வாழ்க்கையினையும் பின்பற்றிய வழி முறைகளையும் உலகிற்கு தெளிவுற உரைத்து ஏனைய மக்களும் வாழ்வாங்கு வாழ வழி வகுத்தார்கள்.

இவ்வாறு காலத்துக்கு காலம் உலகிலே மக்கள் துன்பப்படும் போதெல்லாம் ஏதோவொரு வகையில் அந்த துன்பங்களை போக்கிட பல மகானுபாவர்கள் மக்களோடு மக்களாகவே வாழ்ந்து அந்த துன்பத்தை வெல்வதற்கான பல வழி முறைகளை போதித்து வந்திருக்கிறார்கள் தற்போதும் போதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் உபதேசித்த நல் வழியினை தொடர்ந்தும் கடைப்பிடித்து வரும் போது தடைக்கற்களாக தோற்றமளித்தவையெல்லாம் படிக்கற்களாக இருந்து மனிதர்களது வாழ்வினை மேன்மையுறச் செய்யும் என்பது திண்ணம்.

இவ்வாறு மனித வாழ்வின் மேன்மைக்கு நல் வழி காண்பிக்கும் மகானுபாவர்களின் உபதேச நெறி நின்று அவர்கள் அடிச்சுவட்டினை பின்பற்றி வாழ்ந்து வருதலே ஆன்மீக வாழ்வாகிறது.

உள்ளும் புறமும், இகத்திலும் பரத்திலும்,நன்மையிலும் தீமையிலும், அன்பிலும் கோபத்திலும், ஆசையிலும் ஏமாற்றத்திலும், என இப் பிரபஞ்சத்தில் நிகழும் அத்தனை விடயங்களிலும் ஒரு சக்தி பின் புலமாக இருந்து அவற்றிற்கான பலன்களை வழங்குகிறது அல்லவா! இங்கே நன்மை பயக்கும் விடயங்கள் நிகழும் போதும் அந்த சக்தியின் முழுமைத் தன்மையான இன்பத்தினை மனிதர்கள் அனுபவிக்கும் போதும் அவ் இன்பத்தினை நல்ல சக்தி என்று போற்றுகிறார்கள் அதுவே துன்பத்தினை அனுபவிக்கும் போது அதனை தீய சக்தி என்று தூற்றுகிறார்கள்.DSC 0538

ஆக ஒரேயொரு சக்திதான் மனிதர்கள் ஆற்றும் அனைத்து செயல்களுக்கும் பிண்ணணியாக விளங்குகிறது ஆனாலும் அவர்கள் எதனை சார்ந்து தத்தம் செயல்களை முன்னெடுக்கிறார்களோ அதற்குண்டான பலன்களை அது வழங்கி விடுகிறது அது நல்லதோ கெட்டதோ அவர்கள் ஆற்றும் கருமங்களாலே பலன்களும் விளைகின்றன ஆனாலும் மனிதர்கள் தம் செயல்களின் பலன்களாக இன்பம், துன்பம் என இருவேறு தன்மைகளில் உணர்வதன் காரணமாக அவர்களால் தம்மையும் இப் பிரபஞ்சத்தினையும் இயக்கும் பிரம்ம சக்தியின் தார்ப்பரியத்தினை உணர இயலவில்லை என்றே கூறலாம்.

இங்கே செயல்களும் செயல்களுக்கான பலன்களுமே வேறுபடுகின்றதேயொழிய அவர்கள் செயல்களுக்கான பலன்களை தீர்மானித்து வழங்கும் சக்தி ஒன்றுதான் என்பதனை மிக தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறதல்லவா! ஆக மனிதர்கள் செய்யும் செயல்கள் அத்தனைக்கும் பலன்களை வழங்கும் ஆதி சக்தியான பிரம்ம சக்தியைத்தான் இறைவன் என்று அழைக்கிறோம்.

அப்பேற்பட்ட பிரம்ம சக்தியினை ஈர்த்தெடுத்து அதன் மூலம் நற் காரியங்களை ஆற்றிக் கொண்டு அதன் பலனாக நிரந்தரமான பேரின்ப வாழ்க்கையினை வாழ்வது எவ்வாறு என்பதனை அந்த வாழ்கை வாழும் ஒருவரால்தானே காண்பிக்க இயலும்.

இப் பிரபஞ்சத்தையே சிருஷ்டி செய்த பரம் பொருளுக்கு இவ்வுலகம் எவற்றையெல்லாம் ஏற்கும் அல்லது ஏற்றுக் கொள்ளாது என்பது பற்றி அறியாதவரா என்ன! இவ்வுலக மக்கள் ஏன் துன்பப்படுகிறார்கள் அந்த துன்பத்திற்கு என்ன காரணம் என்று அறிந்து அவர்களது அவலக்குரல் கேட்டு படைத்தவனே ஒரு வேளை இவ்வுலகில் ஏதோ ஒரு மனித ரூபத்தில் தோன்றி மக்கள் எதை விரும்புவார்களோ எவற்றையெல்லாம் கண்டால் பற்றிப் பிடிப்பார்களோ அந்த உருவத்தில் அந்த தன்மையில் வாழ்ந்து காட்டி போதிப்பார் ஆங்காங்கே பல யோக ஆஷ்ரமங்கள் அமைத்து அதன் மூலம் உலகிற்கு ஆன்மீக வழியினை போதிப்பார்.DSCF9406 17

பண்டைய காலங்களில் சித்தர்கள் யோகிகள் எல்லாம் அந்தந்த காலத்திற்கு ஏற்றால் போல மக்கள் எதனை விரும்பினார்களோ அந்த தன்மையோடு தாடி ஜடாமுடி வளர்த்துக் கொண்டும் காடுகளிலும் மலைக் குகைகளிலும் வாழ்ந்து வந்தார்கள் சிலர் தம் தப வாழ்க்கை முடிவுக்கு வந்து ஞான நிலை அடைந்ததும் தம்மை அறியாமல் வளர்ந்த ஜடாமுடியினையும் தாடியினையும் மழித்து விட்டு உலகிற்கு நல் மார்க்கத்தினை போதித்தார்கள் சிலர் அதை கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டு விட்டார்கள்.

ஆனால் இன்றைய உலகில் இத்தனை நவநாகரீகங்களையும் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் நிற்கும் தருணத்தில் மக்களுக்கு வழிகாட்ட வரும் ஞானிகள் அழுக்குடனும் எங்காவது வீதியோரத்திலும் கோவணம் ஒன்றை கட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு இருந்தால் யார்தான் அவர்களை நாடிச் செல்வார்கள்? இவ்வாறு நாகரீக வளர்ச்சியினை உருவாக்க மனிதர்களுக்கு அந்த அறிவினை வழங்கிய பரம்பொருளுக்கு அந்த மனிதர்களை நெறி தவறாமல் காத்திட என்னென்னவெல்லாம் செய்யவேண்டும் எந்த உருவத்தில் இந்த உலகில் அவதரித்தால் அவர்களை வழிநடாத்தலாம் எவ்வாறான வழி முறைகளையும் அதற்கான யுக்திகளையும் கையாளலாம் என்பதனை அறியாதவரா என்ன?

அதனால்தான் காலத்திற்கு ஏற்றால் போல மக்கள் வாழும் முறைகளை வைத்தே அவற்றை உதாரணமாக ஒப்பிட்டு அவர்களுக்கான உபதேசத்தினை இலகுவாக புரியும் விதத்தில் கூறுகிறார்கள் வேதங்களை பற்றி விளக்கப் போனால் அவற்றின் உள்ளார்ந்த அர்த்தத்தினை பொறுமையாக புரிந்து தெளிவடையும் நிலையில் மனிதர்கள் இல்லை அதனால் அவர்களுக்கு புரியும் விதத்தில் உரைப்பதே சாலச் சிறந்ததாகிறது.

புத்த பகவான் தான் தனக்குள் கண்டுணர்ந்த விடயங்களையே மக்களுக்கு போதித்தார் தான் காணாத எந்த விடயத்தையும் அவர் போதிக்கவில்லை.

ஒரு ஞானி மகா பாரதத்தை பற்றி உபதேசிக்கிறார் எனில் அவர் அந்த மகாபாரதம் நிகழ்ந்த சூழலில் தன் மனதை இருத்தி அதனோடு ஒன்றிய நிலையில் ஸ்ரீ கிருஷ்ணரைப்பற்றி கூறும் போது அவர் சாட்சாத் ஸ்ரீ கிருஷ்ணராகவே மாறி விடுகிறார் அரிச்சுனனை பற்றி உரைக்கும் போது சாட்சாத் அரிச்சுனனாகவே மாறி விடுகிறார் இதுவே பரப்பிரம்மத்தோடு தன்னை ஐக்கியமாக்கி கொண்ட ஞானிகளது நிலை.DSC 0646

இவற்றையெல்லாம் உணர்வதற்கும் அனுபவிப்பதற்கும் வாருங்கள் என்றுதான் கடந்த பதினாறு வருடங்களுக்கும் மேலாக “ஆன்மீகம் மலிவு மலிவு வாருங்கள் இலவசமாக பெறுங்கள்” என்று அனைத்து வழிகளிலும் கூவிக் கொண்டிருக்கிறார் மகா யோகி இவ்வாறுதான் கடந்த காலங்களிலும் வள்ளலார் பெருமானார் “கடை விரித்தேன் கொள்வாரில்லை கட்டிக் கொண்டேன்” என்று கூறிச் சென்றார்.

வரலாறுகளை புரட்டிப் பார்த்தால் இவ்வுண்மை எளிதில் புரிந்து விடும் எனவே ஆன்மீக வாழ்க்கை என்பது அந்த வாழ்வினை வாழும் ஞான குரு ஒருவரை சரணடையும் போது “மனம் போல் மாங்கல்யம்” என்பதனைப் போல நிட்சயம் மனிதர்கள் வாழ்வு எந்த தடைகளுமற்ற வாழ்வாக மிளிரும்.

தியானம் என்றால் என்ன?

பிரபஞ்ச உண்மையினை தனக்குள்ளேயே உணரும் நிலையே தியானம் அதற்காகவேதான் அவ்வுண்மைகளை மேலே கூறி உங்களை தியானத்திற்குள் அழைத்து வந்திருக்கிறோம் இனி தியானம் என்றால் என்ன? என்பதனைப்பற்றி பார்ப்போம்.

சாதாரணமாக மனிதர்களுக்கு அறியாமையினால் இயலாமை ஏற்பட்டு அதனால் முயலாமை எனும் சோர்வு ஏற்படுகிறது அந்த சோர்வினை நீக்கி புத்துணர்வினை நல்குவது தியானம் அந்த புத்துணர்வினை உண்டாக்குவதற்காக கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை ஆன்மீக வாழ்வாகிறது.

இவ்வாறு கடைப்பிடிப்பதற்கும் அந்த வாழ்க்கையினை வாழ்வதற்கும் வழி காட்ட அவ் வாழ்க்கையினை கடைப்பிடித்து முழுமை நிலையான ஜீவன் முக்தி பெற்ற சமாதி நிலையடைந்த ஒரு மகா ஞானியினது வழிகாட்டல் மிக மிக இன்றியமையாத ஒன்றாகிறது.

இப்போது அப்பேற்பட்டவரை நாம் எவ்வாறு அடைவது அல்லது அறிந்து கொள்வது எனும் வினா நிட்சயமாக ஆன்மீக நாட்டமும் தேடலும் உள்ளவர்களுக்கு மனதிலே எழும் அவ்வாறு வினா எழுபவர்கள் உங்களுக்கான வழிகாட்டக்கூடிய குரு கிடைத்து விட்டார் என்றே எம்மால் கூற முடியும் எப்போது இந்த உபதேச தொகுப்பினை படிக்க ஆரம்பித்தீர்களோ அப்போதே உங்கள் வினாவிற்கான விடையினை நோக்கி நீங்கள் நகர்த்தப்பட்டு விட்டீர்கள் என்றே பொருள்.

ஆக அந்த நிலையடைந்த ஒருவரால்தான் இத்தனை தெளிவாக ஆன்மீக வாழ்வு பற்றி உரைக்க இயலும் என்பது புலனாகும் அவ்வாறான தெளிவு உண்டாகும் போது மகா யோகியின் தியான வாழ்வு பற்றிய உபதேசம் இலகுவில் புரிந்து விடும்.

இறைவனை நினைத்து நாம் என்னென்னவெல்லாமோ செய்தோம் ஆனால் அதன் பலனை எம்மால் முழுமையாக அனுபவிக்க இயலவில்லையே என்ற ஏக்கம் பலருக்கும் உண்டு அந்த ஏக்கத்தை போக்கி ஏகமான இறையினுள் திளைத்து  முழுமையான இன்பத்தினை தரவல்லது இந்த தியானம்.

உலகில் தோற்றம் பெற்ற அனைத்து மகான்களும் ஞானிகளும் அவதார புருஷர்களும் ஒரு குருவினை சரணடைந்து குருகுலக் கல்வி மூலமே தம் மூலத்தை உணர்ந்தார்கள் குரு உபதேசிக்கும் சக்திவாய்ந்த மந்திர ஜெபங்கள் மூலம் தம் புலன்களை ஒடுங்கச் செய்து பின்னர் தியானத்தில் ஆழ்ந்தார்கள் அதுவே சமாதி நிலை ஆன்மா ஆன்மாவை சார்ந்த பேரானந்த நிலை சாட்சாத் இறை நிலை அந்த ஆழ்நிலையில் தத்தம் கடமைகளை உணர்ந்தார்கள் அதன் பின்னர் அந்த உணர்வோடு லயித்திருந்து தம் கடமைகளை ஆற்றினார்கள் அதனால் கடமைகள் அனைத்தும் தடையின்றி நிகழ்ந்தன அதன் காரணமாக உலகிற்கு ஆன்மீகம் சார்ந்த வாழ்வின் மகத்துவம் புரிய வைக்கப்பட்டது.DSCF9128 scaled

தியானம் என்பது ஆரம்பத்தில் மிக கடினமான ஒன்றாக காணப்பட்டாலும் அதை சகித்துக் கொண்டு விடாமல் தியானத்தை கடைப்பிடிக்கும் போது மனிதர்களை துன்பப்பாதைக்கு இட்டுச் சென்ற புலன்கள் மெல்ல மெல்ல ஆன்மாவினுள் ஒடுங்க ஆரம்பிக்கும் அப்போது போது உயிர் சக்தியான பிரபஞ்ச சக்தியானது மனிதர்களது புலன்களை வழி நடாத்த ஆரம்பிக்கும் அவ்வாறு ஆன்மா பஞ்ச புலன்களை வழி நடாத்த ஆரம்பிக்கும் போது தியானம் இலகுவானதான மாறி விடும் அவ்வாறு மனிதர்கள் கடைப்பிடிக்கவேண்டிய தியானத்திற்கான சில வழி முறைகளை மகா யோகி பின்வருமாறு கூறுகிறார்.

1.தினந்தோறும் அதிகாலையில் எழுந்து அதாவது பிரம்ம முகூர்த்தம் எனப்படும் 4:00 மணி முதல் 4:30 மணி வரையிலான காலம் தியானத்திற்கு மிகவும் உகந்த காலமாகிறது

2. படுக்கையை விட்டு எழுந்தவுடனே அப்படியே நிமிர்ந்து அமர்ந்திருந்து கண்களை மூடி ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ நேரான எண்ணங்களான “நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், மிக சந்தோசமாக இருக்கிறேன் என தொடங்கி உலகில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்கிறார்கள் அவ்வாறு அவர்கள் வாழ வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு பின்னர் எழுந்து காலைக்கடமைகளை முடித்து குளித்து முழுகி உங்கள் வழிபாட்டறையில் அமர்ந்து நல்ல மணமுள்ள பத்திகளை வைத்து சுத்தமான நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் விளக்கு அல்லது தேங்காயெண்ணெய் விளக்கு
ஏற்றிடுங்கள்.

3.நேராக நிமிர்ந்து அமர்ந்திருந்து உடலை இலகுவாக வைத்துக் கொண்டு கை விரல்களை பின்னி பிடித்துக் கொண்டு கண்களை சாதாரணமாக மூடிக் கொண்டு மனதிலே உங்கள் இஷ்ட தெய்வத்தையோ அல்லது வழி காட்டும் குருவின் உருவத்தையோ அல்லது உலகிற்கும் உங்களுக்கும் நன்மை தரக்கூடிய விடயத்தை மனதிலே எண்ணிக் கொண்டு வேதங்களிலே மகா மந்திரங்களாக போற்றப்படும் காயத்திரி மகா மந்திரத்தினையும் மகா மிருத்தியுஞ்ஜெய மந்திரத்தினையும் 9 தடவையோ அல்லது 21 தடவையோ உச்சரித்து ஜெபம் செய்ய வேண்டும் இதனை காலையும் மாலையும் என இரு வேளைகள் கடைப்பிடித்து வர வேண்டும்.

04. மந்திர ஜெபம் நிறைவு பெற்றதும் உச்சரிக்கப்பட்ட மகா மந்திரங்களின் அதிர்வலைகளால் மனதின் சலனம் அடங்கி கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும் அப்போது நீங்கள் ஒரு பார்வையாளராக இருந்து உங்கள் மனதை கவனிக்க ஆரம்பியுங்கள் அவ்வாறு கவனிப்பது கடினமாக தென்பட்டால் நீங்கள் உள்ளே இழுக்கும் சுவாசத்தினையும் வெளியே விடும் சுவாசத்தினையும் கூர்ந்து கவனியுங்கள் அதற்காக சுவாசத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டோ அடக்கிக் கொண்டோ இருப்பது கவனித்தல் என்று அர்த்தம் கிடையாது சாதாரணமாக சுவாசம் வருவதையும் வெளியே போவதையும் கவனியுங்கள்.

05. இவ்வாறு கவனிக்கும் போது மனம் தானாக அமைதி நிலையடைந்து ஒரு மகிழ்ச்சியான இனம் புரியாத சந்தோசமான நிலையினை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள் அந்த நிலையில் புலன்கள் ஒடுங்கி ஆன்மாவில் நிலை பெற்று நிற்கும் அது உணர்வு நிலையாக வீற்றிருந்து செய்யும் செயல்களை தடையின்றி செய்யவைத்து அதன் பலன்களையும் எந்த விதமான தடைகளுமின்றி முழுமையாக அனுபவிக்கும் நிலையினை தரும் என்பது திண்ணம்.

இந்த நிகழ்வினை மிகவும் எளிமையாக விளக்கவே ஸ்ரீ இராம கிருஷ்ண பரமஹம்சர் இவ்வாறு கூறுகிறார் “ஒரு கையில் கடவுளை பிடித்துக் கொண்டு மறு கையினால் உங்கள் உலக கடமைகளை ஆற்றுங்கள் அவ்வாறு கடமையாற்றும் போது ஒரு கையான மனதிலே இருக்கும் கடவுளின் எண்ணம் மறுகையினால் ஆற்றப்படும் கருமங்களுக்கு தடையேற்படாமல் பாது காக்கும் அவ்வாறு கடமையில் முழுமை நிலை ஏற்பட்டதும் நிறைவாக இரு கைகளாலும் இறைவனை வணங்குங்கள்” என்கிறார் அதாவது மனதாலும் உடலாலும் கடவுளை வணங்குங்கள் என்பதே அவர் கூறியதன் பொருள்.

ஏனெனில் இறை எனும் ஆன்ம சக்தியே மனிதனது செயல்களுக்கு மூலதனமாகும் அவ்வாறு மூலதனமான சக்தியினை பெறும் வழியே தியானமும் அதனோடிணைந்த ஆன்மீக வாழ்வுமாகிறது.

பக்தி யோகம்…DSC 0355

பக்தி யோகம் எப்பேற்பட்டது எனில் ஒரு குழந்தையின் மேல் மிகுந்த அன்பு வைத்திருக்கும் தாயானவர் அந்தக் குழந்தையினை வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றாலும் அந்தக் குழந்தையின் நினைவாகத்தான் இருப்பார் அப்போது அக்குழந்தைக்கு ஏதாவது ஆபத்து என்று தகவல் அறியும் போது அங்கே செய்து கொண்டிருந்த வேலையினை அப்படியே நிறுத்தி விட்டு குழந்தையினை நோக்கி ஓடி வருவதனைப் போன்ற நிகழ்வுதான் ஆன்மீக வாழ்க்கையின் தத்துவம்.
இதுவே பக்தி யோகம் எனப்படுகிறது.

மேலும் பக்தி யோகத்திற்கு உதாரணமாக மகா பாரதத்தில் கூறப்பட்டுள்ள இன்னுமொரு விடயத்தினை கூறலாம் கோகுலத்தில் கோபிஸ்திரிகள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் புலாங்குழல் ஓசை கேட்டதும் தாம் செய்த வேலைகளை அப்படியே இடையில் நிறுத்திவிட்டு அந்த இசை கேட்ட திசை நோக்கி ஓடிச் சென்று பகவானின் புல்லாங்குழல் இசையில் மயங்கி திளைத்தார்களாம் மீண்டும் வீடு வந்து பார்க்கும் போது அவர்கள் இடையில் நிறுத்திவிட்டுச் சென்ற அத்தனை வேலைகளும் நிறைவடைந்து இருக்குமாம் என்று மகா பாரதத்தில் கூறப்பட்டுள்ளது உண்மையில் அந்த கதையின் சாராம்சம் என்னவெனில் மனம் இறை மீது லயித்திருக்கும் போது செயல்கள் அத்தனையும் தடைகளின்றி நிறைவேறும் என்பதனை உணர்த்தவே இந்த விடயம் அங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்தி யோகம் முழுமையடைந்ததும் கரும யோகம் சித்திக்கும் அதனை தொடர்ந்து ராஜ யோகம் சித்திக்கும் இறுதியாக ஞான யோகம் சித்திக்கும் இதுவே யோக நிலையின் படி முறைகளாகின்றன.

கண்களை திறந்து கொண்டு ஆற்றிய கருமங்களை கண்களை மூடியிருந்து இல்லாமல் செய்தல் தியானம் ஆகிறது அவ்வாறு கண்களை மூடி இல்லாமல் செய்து விட்டு மீண்டும் கண்களைத் திறந்து கருமமாற்றும் போது அந்த கருமம் பாதிக்காமல் இருப்பதற்கு கண்களை மூடி அதனை இல்லாமல் செய்திட எதை நினைத்து எதை சார்ந்து இருந்தோமோ அந்த விடயத்தை சார்ந்திருந்து கருமமாற்றுதலே ஆன்மீக வாழ்க்கையாகிறது மாறாக கண்களை திறந்திருந்தும் கருமத்தில் மூழ்கி செயலாற்றி விட்டு மீண்டும் கண்களை மூடியிருந்து அதே கருமங்களை எண்ணிக் கொண்டும் அதை சார்ந்து இருத்தலும் தியானமாகாது அது ஆன்மீக வாழ்க்கையுமாகாது.1600695004121509 scaled

உதாரணத்திற்கு ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் மேடையில் முருகன் வேலோடும் மயிலோடும் இருப்பார் சிலவேளை கோவணம் கட்டிக் கொண்டு ஆண்டியாக இருப்பார் அவர் வானத்தில் மயிலில் ஏறி பறப்பார் என தான் முருகனை நேரில் கண்டது போன்று பேசுவார் ஆனால் அந்த மக்கள் கூட்டத்தில் சற்றே சிந்திக்கக்கூடிய சில அறிவாளிகளும் இருந்தார்கள் அவர்கள் இப்படி முருகனை பற்றி இவர் மேடையில் பேசுகிறார் ஆனால் அவர் செய்யும் தொழிலோ வட்டிக்கு பணம் கொடுப்பது ஆக இந்த செயலை செய்யும் நபர் எவ்வாறு முருகனை கண்டிருப்பார் எனும் சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது இதனை அவர்கள் ஆராய்ந்து பார்க்கும் போது அவரது தாத்தா, பாட்டி, அம்மா,அப்பா போன்றவர்கள் அவரின் சிறுவயதிலேயே முருகன் இப்படித்தான் இருப்பார் என்று கூறி வைத்துள்ளார்கள் அதனால் அவருக்கு முருகனின் பிம்பம் அவ்வாறே பதிந்து விட்டது அந்த பதிவினை பார்த்துத்தான் முருகனை தான் நேரில் கண்டவாறு பேசுகிறார் என்பதனை புரிந்து கொண்டார்கள்.

அதுவே உண்மை நிலையடைந்த ஞானிகள் சமாதி நிலையெனப்படும் ஆன்மா ஆன்மாவினை சார்ந்து நிற்கும் நிலையடைந்தவர்கள் உலகிற்கு உண்மை ஞானத்தினை போதிக்கிறார்கள் அவர்களை பின்பற்றும் மக்களும் பேரின்ப வாழ்வு வாழ்கிறார்கள்.

மனிதர்கள் துன்பத்தால் விரக்தியுற்றிருக்கும் நிலையில் அவர்களது பார்வை வேறு கோணத்தில்தான் இருக்கும் அதுவே தகுந்த ஞான குருவின் வழிகாட்டுதலினால் ஆன்ம நிலைக்குள் அந்த பார்வை உள் முகமாக திருப்பப்படும் போது பேரானந்த நிலை கிடைக்கும் அப்போது அவர்களது பார்வை நேரான விடயங்களையே காட்சிப்படுத்தும் எங்கும் எதிலும் நேரானவற்றையே காண்பார்கள் ஆக்க சக்தியே அவர்களது மூலதனமாக தோற்றமளிக்கும் எதிர்மறை எண்ணம் மறைந்து போயிருக்கும் மனிதன் தன் சுய மன நிலையில் இருந்து பார்க்கும் போது அங்கே தோற்றமளிக்கும் விம்பங்கள் குறையற்ற நிறைவான விம்பங்களாக தென்படும் அதே போன்று விரக்தியுற்றவர் பார்வையில் அதே விம்பங்கள் எதிர்மறையாக தோற்றமளிக்கும்.

எனவே ஒவ்வொரு மனிதனின் எதிர் மறை எண்ணங்களே அவர்கள் பார்வையினை தவறாக்கி விடுகிறது அது அவர்களது சமூக வாழ்விலும் தாக்கம் செலுத்தி பல குறைகளை பேச வைத்து அவர்களை அவர்களே சமூகத்தில் இருந்து ஒதுக்கிக் கொள்கிறார்கள் பின்னர் சமூகம் என்னை ஒதுக்கி விட்டது என்று கதறுகிறார்கள் தனி நபர்கள் பலர் சேர்ந்துதான் சமூகம் என்றாகும் போது அச் சமூகத்திற்கு ஒவ்வாத செயல்களை ஒரு தனி நபர் ஆற்றும் போது அது முழுச் சமூகத்தையும் பாதிப்படைய செய்யும் என்பதனை அந்த நபர் உணரவில்லை அதைத்தான் அறியாமை என்கிறார்கள்.

இந்த அறிமையினால்தான் தான் யாரென்று உணர இயலாமல் மனிதர்கள் திண்டாடுகிறார்கள் அந்த அறியாமையினை நீக்கி தான் யார் என்பதை உணரச் செய்து சமூகத்தில் நல்லொழுக்கமுள்ள அனைவரும் போற்றத்தக்க மனிதர்களாக வாழச் செய்வதே ஆன்மீக வாழ்கையாகிறது மாறாக துறவி வேடம் தரித்து குடும்ப வாழ்வை துறந்து காடு மலைகளில் தபம் செய்வதுதான் ஆன்மீக வாழ்க்கை எனும்  தவறான புரிதலில் இருந்து மனித சமுதாயம் வெளியில் வர வேண்டும்.

உண்மையில் துறவு என்பது மனதில் குடிகொண்டிருக்கும் மனிதர்களை துன்பப்படுத்தும் தீய எண்ணங்களான அளவுக்கதிகமான ஆசை, காமம், மோகம், கோபம், குரோதம், பொறாமை, தாழ்வு மனப்பான்மை, பற்று, பாசம் என மனதிலே எவற்றையெல்லாம் அளவுக்கதிகமாக ஏற்றி வைத்துள்ளார்களோ அவற்றையெல்லாம் விட்டு விட்டு அன்பு, கருணை, காருண்யம், பிறருக்கு உதவுதல், தன் உயிர் போல பிற உயிர்களையும் நேசிக்கும் தன்மை ஆகியவற்றை மனதிலே வளர்த்து வருதலே துறவு வாழ்க்கை ஆகிறது அதுவே ஆன்மீக வாழ்க்கை என்று ஆணித்தரமாக மகா யோகி கூறுகிறார்.DSC 0870 1 scaled

ஞானிகளை உலகில் நிகழும் எந்த நிகழ்வுகளும் பாதிப்பது கிடையாது ஏனெனில் ஆன்மா ஆன்மாவினை சார்ந்து வாழும் நிலையான சமாதி நிலையினை அடைந்த அவர்கள் இப் பிரபஞ்சத்தின் ஸ்தாபகராகி விட்டார்கள் அப்பேற்பட்டவர்களை நீராலோ நெருப்பாலோ என பஞ்ச பூதங்கள் எதனாலும் அழித்திட இயலாது ஏனெனில் பஞ்ச பூதங்களை இயக்கும் ஆதி சக்தியோடு அவர்கள் இரண்டற கலந்து விட்டார்கள் இவ்வுலகில் அவர்கள் எதை நினைத்தாலும் எந்த தடைகளுமின்றி அடைய இயலும் ஆனாலும் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் தான் என்ன கடமைக்காக இவ்வுலகில் மனித சரீரம் எனும் வாடகை வீட்டினை எடுத்து வந்தார்களோ அந்த வீட்டில் இருந்து கொண்டு ஆற்ற வேண்டிய கடமைகளை மாத்திரம் ஆற்றி விட்டு கடமை நிறைவடைந்ததும் அவ் வீட்டினை  விட்டு விட்டு தன் அடுத்த கடமைக்காக இன்னுமொரு வீடு நோக்கி செல்கிறார்கள்.

ஆனால் மனிதர்களோ அவர் விட்டுச் சென்ற வீட்டினையே நினைத்துக் கொண்டு இருப்பதால் புதிய வீட்டிற்குள்ளும் இருந்து அவர்தான் நமக்கு உபதேசிக்கிறார் எனும் இரகசியத்தினை புரிந்து கொள்ள முடிவதில்லை பரம்பொருளான இறைவன் அகமும் புறமும் நிறைந்து இருக்கிறார் ஆனாலும் அந்த உண்மையினை உள்முகமாகத்தான் கண்டுணர முடியும் அதன் பின்னர்தான் அகமும் புறமுமாக வீற்றிருந்து இப் பிரபஞ்சத்தினையும் அதே சக்திதான் இயக்குகிறது என்றும் மனிதர்கள், மரஞ் செடி கொடிகள், அசையும் அசையாப் பொருட்கள் என  அனைத்துக்குள்ளேயும் அந்த பரம்பொருள்தான் நிறைந்திருக்கிறார் என்ற உண்மையினையும் அறிய முடியும் ஆனால் வெளி முகமாக பார்க்கும்  மனிதர்களால் இவ்வுண்மையினை அறிய இயலாமல் போகிறது காரணம் மனிதர்கள் உலக விடயங்களிலும் கேளிக்கைகளிலும், அனாவசியமான கொண்டாட்டங்களிலும் தம் சுயத்தினை இழந்து விட்டார்கள்.

இதைத்தான் ஸ்ரீ கிருஷ்ணர் அரிச்சுனனிடம் எடுத்துரைக்கிறார் படைத்தவன் நான் எந்த சலனங்களுமின்றி இவ்வுலகில் பிறந்து எந்த தடைகளுமின்றி அனைத்துக் கடமைகளையும் ஆற்றும் போது என்னால் படைக்கப்பட்ட நீ எதற்காக உன் கடமையில் இருந்து நழுவுகிறாய் இதுவே மாயை அரிச்சுனா! எப்போது நீ எந்த சலனமும் அற்று என்னைப் போல் கடமையாற்றுகிறாயோ அப்போது நீ கடமைகளில் இருந்து விடுதலையானவனாகிறாய் அதாவது படைத்தவனாகி விடுகிறாய் அப்போது உன் கடமைகள் அனைத்தும் சரியாக நடக்கும் கவலையை விடு அரிச்சுனா காண்டீபம் ஏந்து என்கிறார்.

இது அன்று அரிச்சுனனுக்கு உரைத்தால் போல் உலகத்திற்கு அவர் உரைத்த ஆன்மீக விஞ்ஞானம்(Spiritual science)

ஒரு இடத்துக்கு செல்வதற்கு பேரூந்தில் ஏறி விட்டு இடையில் இறங்கி விட்டால் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று முடிக்க வேண்டிய காரியங்களை முடிக்கத்தான் முடியுமா? என்று சற்றே சிந்திக்க வேண்டும் சரியை, கிரியை வழிபாடுகள் அனைத்தும் ஆன்மீக வாழ்விற்கான ஆரம்ப படிகளே அன்றி மலை உச்சி அதுவல்ல என்பதனை உணர்ந்தாலே போதுமானது அதைத் தாண்டி யோகம்,  ஞானம் எனும் படி நிலைகள் உள்ளன அவற்றை கடைப்பிடித்து மனிதர்கள் முழுமை நிலை பெற வேண்டும் என்றே ஞானிகள் உபதேசிக்கிறார்கள் இதனை உணர்த்தவே ஈஸ்வரப்பட்டர் மகரிஷி தன் ஞானப் பாடல் மூலமாக பேருண்மை ஒன்றினை உரைக்கிறார்.DSC00726 scaled

” மன நிலையை உயர்த்திடவே மலை மேலே கோயில் அமைத்தான்” ஆக மலை மேலே கோயில் அமைத்து அவர்களை ஏறி வரச் செய்ததும் ஞானிகளே அங்கே அவர்கள் சுவாசம் நேராக நிகழுகிறது இலக்கு நோக்கி முன்னேறும் நிலை உண்டாகிறது இவ்வாறு மனிதனின் மன நிலையினை உயர்த்துவதற்காகவே என்றும்; பல படிகளை தாண்டினால்தான் மலை மேலே இருக்கும் ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவன் தரிசனம் கிட்டும் என்பதனைப் போல தியானத்தில் அமர்ந்து மனதில் அமைதி ஏற்படும் போது மனம் புலன்களின் பிடியிலிருந்து மீண்டு சலனமற்ற உயர் நிலையான சமாதி நிலையினை அடைந்து விடும் அதன் போது மனித உடலினுள் சகஷ்ரார சக்கரமெனும் கருவறையில் வீற்றிருக்கும் இறைவனை ஆக்ஞா சக்கரத்தில் இருந்து துதித்திடலாம் என்கிறார்; இரு வரிகளில் மிக ஆழமாக கருத்தினை ஊன்றி விதைத்திருக்கிறார் ஈஸ்வரப்பட்டர் மகரிஷிகள்.

சலனத்தின் பக்கமே மனிதர்கள் மனம் உழன்று கொண்டிருப்பதால் பணம், பொருள், சொத்து, சுகம் போன்ற உலக இச்சைகளில் பற்றினை ஊன்றி விதைத்துள்ளதால் ஞானிகள் ஊன்றி விதைத்துள்ள ஞானத்தினை அவர்களால் உணர முடியாமல் போய் விடுகிறது இது அவர்களின் தவறல்ல அவர்கள் வாழும் சூழல் தன்மைகள் அவர்களை ஆசையின் பக்கமே அடிமைப்படுத்தி வைத்துள்ளது இதனை இடைக்காட்டு சித்தர் மிக அழகாக கூறியுள்ளார் “ஆசை கூடக் கூட துன்பம் ஓடி ஓடி வரும் ஆசையை விட விட ஆனந்தமே” என்று பாமர மக்களுக்கும் புரியும் விதத்தில் மிக எளிமையாக ஆசையின் மோசமான விளைவுகளை வலியுறுத்தியுள்ளார்.

இவையனைத்தும் மகா யோகியானவர் தானடைந்த ஞானத்தை ஞானத்தால் அணு அணுவாக பகுத்து ஆராய்ந்து அதன் தன்மைகள், அதன் முடிவுகள் என்ன என்பதனை தனக்குள்ளேயே கண்டுணர்ந்து அதனை உலகிற்கு போதிக்கிறார் தான் காணாத எதனையும் அவர் போதிப்பது கிடையாது.

அவ்வாறு இறைவன் யார்? எங்கிருக்கிறார்? என்பதனை மிகத் தெளிவாக போதித்தருளும் மகா யோகியின் திருவடிகளை வணங்கி இவ் உபதேச தொகுப்பினை உலக உய்விற்காக பகிர்கிறோம்.

தியானத்தினையும் அதனோடு இணைந்த ஆன்மீக வாழ்க்கை பற்றியும் உலகில் தோன்றிய அத்தனை மகான்களும் இவ்வுலகத்திற்கு மிகத் தெளிவாக போதித்து சென்றுள்ளார்கள் ஆனால் மனிதர்களின் அறியாமை அவர்களை திசை திருப்பி பக்தியினை வளர விடாமல் மனதிலே தேவையற்ற  விடயங்களை வளர்த்து விட்டார்கள்.

அதனால் எங்கு பார்த்தாலும் யாரைப்பார்த்தாலும் மரண பயம், நோய், பசி, பஞ்சம், பட்டினி என்று துன்பமான வாழ்வினை வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு மனிதர்கள் பின் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.DSC 1126 scaled

எனவே மனித குலம் தழைக்க அவர்கள் வாழ்வு சிறக்க ஏற்பட்டுள்ள தொற்று நோய் தாக்கத்திலிருந்து மனித சமுதாயம் முற்று முழுவதுமாக விடுபட்டு நோய்ப்பிணி பசிப்பிணி நீங்கிட வேதங்களில் இரண்டு மந்திரங்கள் மகா மந்திரங்களாக போற்றப்படுகின்றன கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் ” மந்திரங்களில் நான் காயத்திரி” என்று கூறிய அம் மகா மந்திரத்திரமான காயத்திரி மகாமந்திரத்தினையும் மகா மிருத்தியுஞ்ஜெய மந்திரத்தினையும் தினந்தோறும் பாராயணம் செய்து வருவோமானால் இவ்வுலகம் எதிர் கொண்டிருக்கும் நோய்ப்பிணியில் இருந்து நிட்சயமாக  காப்பாற்றுப்படும் ஏனெனில் மனிதர்களை படைத்த இறைவன் தன் பிள்ளைகள் அழுவதனை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கமாட்டார் பிள்ளை ஒரு அடி எடுத்து வைத்தால் தகப்பன் பத்து அடி எடுத்து வைத்து ஓடோடி வருவார் என்பதுதானே உண்மை  இதுவே வரலாறும் கூட.

மக்களுக்கு துன்பம் வரும் போதெல்லாம் அவர்கள் தம்மை படைத்த இறைவனிடம் மனம் வருந்தி முறையிடும் போது கண்டிப்பாக அதற்கான தீர்வினை அவர் நல்கியே ஆகுவார் எனவே மக்களே! மகா யோகியின் மேன்மையான இவ் உபதேசத் தொகுப்பினை உலகம் உய்வு பெற அனைவருக்கும் பகிர்ந்து உதவுங்கள் ஏனெனில் தர்மத்தை பார்த்துக் கொண்டிருப்பதுவும் ஒரு வகையில் பாவம்தான் அதுதான் இராமருக்காக வானரங்கள் கடலில் பாதை அமைக்கும் போது அதனை கண்ணுற்ற அணில் பிள்ளை அதனை வேடிக்கை பார்த்திருக்காமல்  தன்னால் முடிந்த உதவியாக மண்ணுக்குள் தன் உடலை புகுத்தி அந்த மண்ணை கடலுக்குள் அமைத்த பாதையில் உதிர்த்தி விட்டதாக வரலாறு கூறுகிறது எனவே மெய்யுணர்வு கொண்டு நல்வழியில் அனைவரும் பயணிப்போம்.

“வாழ்க வளமுடன் வாழ்க வையகம்”

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -