அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவில் இழுப்பறி நீடிக்கும் நிலையில் ஸ்லோவேனியா பிரதமர் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் உத்தியோகபூர்வ முடிவு எதுவும் அறிவிக்கப்படாவிட்டாலும், 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிப்பெற்றதாக ஸ்லோவேனியன் பிரதமர் ஜானெஸ் ஜனியா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மக்கள் டொனால்ட் டிரம்ப் மற்றும் மைக் பென்ஸ் ஆகியோரை இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது மிகவும் தெளிவாக உள்ளது என்று ஜானியா புதன்கிழமை ட்விட் செய்தார்.
மேலும் தாமதங்கள் மற்றும் உண்மைகள் மறுக்கப்படுகின்றன. இது ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள இறுதி மாபெரும் வெற்றி. அமெரிக்கா முழுவதும் நல்ல முடிவுகள் வருவதால் குடியரசுக் கட்சிக்கு வாழ்த்துக்கள் என ஸ்லோவேனியன் பிரதமர் ஜானெஸ் ஜனியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
It’s pretty clear that American people have elected @realDonaldTrump @Mike_Pence for #4moreyears. More delays and facts denying from #MSM, bigger the final triumph for #POTUS. Congratulations @GOP for strong results across the #US @idualliance pic.twitter.com/vzSwt9TBeF
— Janez Janša (@JJansaSDS) November 4, 2020