Home Srilanka அபுதாபியிலிருந்து 11 பேரும் கட்டாரிலிருந்து 18 பேரும் இலங்கைக்கு வருகை!

அபுதாபியிலிருந்து 11 பேரும் கட்டாரிலிருந்து 18 பேரும் இலங்கைக்கு வருகை!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியிலிருந்து 11 பேரும், கட்டாரின், டோஹாவிலிருந்து 18 பேரும் நாடு நேற்று திரும்பியுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அபுதாபியிலிருந்து EY 264 எனும் விமானம் ஊடாக 11 பேரும், டோஹா, கட்டாரிலிருந்து QR 668 எனும் விமானம் ஊடாக 18 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு இலங்கை வந்தடைந்த அனைவரும் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இதற்கு முன்பும் கட்டாரிலிருந்து வந்த QR 668 விமானம் மூலம் 03 பேர் இலங்கை வந்தடைந்திருந்தனர். குறித்த நபர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -