Home International அமெரிக்க அதிபர் தேர்தல்; அதிபர் டிரம்ப் 73, ஜோ பைடன் 91 இடங்களில் முன்னிலை!

அமெரிக்க அதிபர் தேர்தல்; அதிபர் டிரம்ப் 73, ஜோ பைடன் 91 இடங்களில் முன்னிலை!

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் அதிபர் டிரம்ப் 73 இடங்களிலும் ஜோ பைடன் 91 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆரம்ப நிலை வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

அதிபர் டிரம்ப் கென்டக்கி, ஒக்லாமா, மற்றும் இன்டியானாவில் வெற்றி பெற்றுள்ளார். ஜார்ஜியா , தெற்கு கரோலினா, உள்ளிட்ட 73 இடங்களில் டிரம்ப் அதிக வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நியு ஜெர்சி, மேரிலாண்ட் வெர்மன்ட் , உள்ளிட்ட இடங்களை வென்றுள்ள ஜோ பைடன் வர்ஜினியா, டெக்ஸாஸ், ஓஹியோ உள்ளிட்ட 91 இடங்களில் முன்னிலை பெற்று வருவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிவுகளில் முன்னிலை நிலவரம் மாறி மாறி வரும் நிலையில் டிரம்ப்பா -பைடனா என்று கணிக்க இன்னும் கணிசமான முடிவுகள் வெளியான பின்னே தெரிய வரும்.

அதிபர் தேர்தலில் பெரும்பான்மை பெற 270 இடங்கள் தேவை. அதிபர் தேர்தல் முடிவுகளை வெள்ளை மாளிகையில் இருந்தபடி டிரம்ப் கவனித்து வருகிறார். தேர்தல் முடிவுகளை ஒட்டி வன்முறை வெடிக்கலாம் என்பதால் வெள்ளை மாளிகையை சுற்றி அரண் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -