தனியார் டாக்ஸி ( taxi company) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த மூன்று ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு மூன்று ஊரடங்கு உத்தரவு அனுமதிப் பத்திரங்களை சுமார் 12,000 ரூபாவுக்கு விற்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு சந்தேகநபர் பண்டாரகமவில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது