Home Srilanka கடற்றொழிலாளர்கள் ஊடாக கொரோனா தொற்று ஏற்படாதிருக்க நடவடிக்கை- அமைச்சர் டக்ளஸ்!

கடற்றொழிலாளர்கள் ஊடாக கொரோனா தொற்று ஏற்படாதிருக்க நடவடிக்கை- அமைச்சர் டக்ளஸ்!

இந்திய – இலங்கை கடற்பிரதேசத்தில் கடற்றொழிலாளர்கள் ஊடாக கொரோனா தொற்று ஏற்படாதிருக்கும் வழிவகைகள் குறித்து கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்துள்ளார். வடக்கின் கடற்பரப்பில் இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்கள் ஊடாக கொரோனா தொற்று பரவுவதற்கான ஏதுக்கள் உள்ளன.

இந்தநிலையில் தற்போது இடம்பெற்ற வரும் மஞ்சள், போதைவஸ்து பொருட்கள் மற்றும் தங்கக்கடத்தல் போன்ற விடயங்களும் இதில் முக்கியமானவை.

எனவே இது தொடர்பாக பேச்சு நடத்த இலங்கை – இந்திய கூட்டு செயற்குழு கூடவுள்ளது. எனினும் இன்னும் அதற்கான திகதி தீர்மானிக்கப்படவில்லை.

இது தொடர்பில் தாம் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் பேச்சு நடத்தியுள்ளதாக டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -