நாட்டில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு ஊடகவியலாளர் நிறைவேற்றும் பொறுப்பு மேன்மைமிக்கது என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான ஊடகவியலாளர்கள் தமது உயிர்களையும் துச்சமாக மதித்து செயற்பட்டு வருவதைக் காண முடிகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாடு எதிர்கொள்ளும் அனர்த்த நிலமைகளில் ஊடகவியலாளர்கள் தமது தொழில்வாண்மையை கருத்திற்கொள்ளாமல் சிறப்பு மிக்க தேசிய கடமையை நிறைவேற்றுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சில ஊடகவியலாளர்கள் இந்தத் தொற்று நிலமையைத் தோற்கடிப்பதற்காக மக்களுக்கு வழங்கிய அறிவும் விளக்கமும் தகவல்களும் மிகவும் துணைபுரிந்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
பல ஊடக நிறுவனங்கள் ஒன்றிணைந்து மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளன. பிராந்திய ஊடகவியலாளர்களின் பொறுப்புக்களும் மிகவும் சிறப்பு மிக்கதாகும். எதிர்காலத்தில் இதற்காக உரிய பாராட்டை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.