Home Srilanka "கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கையால் முடியும்"- உதவத் தயார் என்கிறது உலக வங்கி!

“கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கையால் முடியும்”- உதவத் தயார் என்கிறது உலக வங்கி!

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளையும் உலக வங்கி பாராட்டியுள்ளது.

மேலும், இவ்வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் பாரிஸ் ஹேய்டட் சர்வோஸ் நேற்றுமாலை (03.11.2020) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து, பேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,

இலங்கையும் – உலக வங்கியும் பல வருடங்களாக பரஸ்பர நம்பிக்கையுடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அத்தோடு, தற்போதைய தொற்றுப் பரவலை விரைவில் கட்டுப்படுத்த இலங்கையால் முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.123290208 397650138074527 8035562705538217848 n 123632033 350221849540298 7957697496569471806 n 123645472 985231341982759 8555348485041824790 n 123783753 681815746089840 1156256805038103500 n

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -