கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியலும நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள சுற்றுலாவிடுதி மற்றும் வீட்டின் மீது மலைத்தொடரிலிருந்து பாரிய கற்கள் சரிந்து விழுந்ததில் முற்றாக சேதமடைந்துள்ளன.
கொஸ்லந்த தியலும நீர் வீழ்ச்சி அமைந்துள்ள மலைத்தொடரிலிருந்து இன்று அதிகாலை கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததில் சுற்றுலா விடுதி மற்றும் வீடு மற்றும் வீட்டில் உள்ள உபகரணங்களும் சேதமடைந்துள்ளன.
இவ்விபத்து தொடர்பில் கொஸ்லந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் குறித்த பிரதேசத்திலிருந்த சுற்றுலாவிடுதியின் உரிமையாளர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தினால் வெள்ளவாய பெரகல வீதி சுமார் 3 மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஹல்துமுல்லை பிரதேச சபையின் பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் வீதியிலிருந்த கற்கள் அப்புறப்படுத்தப்பட்டதும் போக்குவரத்து சீரானமை குறிப்பிடத்தக்கது.