வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்களை பொறுப்பேற்க மறுப்பு தெரிவிக்கும் சுகாதார ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நோயாளர்கள் அவ்வாறு திருப்பியனுப்பப்படும் பட்சத்தில் அது குறித்து அறிவிக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.