பிரேசில் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் Eduardo Pazuello வுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
அதிக அளவில் நீரிழப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Brazil’s health minister Eduardo Pazuello, who tested positive for the coronavirus last month, left hospital on Sunday two days after being admitted for dehydration https://t.co/oyRAF7dKIq
— AFP news agency (@AFP) November 1, 2020
இவர் பிரேசிலில் நடைபெற்று வரும் தற்போதைய அரசின் 3வது சுகாதாரத்துறை அமைச்சர் ஆவார். ஏற்கனவே 2பேர் ராஜினாமா செய்து விட்ட நிலையில் 3வதாக இவர் நியமிக்கப்பட்டார்.