புதிய விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இலங்கையின் 18 ஆவது விமானப்படை தளபதியாக எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.
யுத்த காலத்தில் விமானப்படையில் இவர் சிறந்த முறையில் செயற்பட்டுள்ளார்.
1990 ஆம் ஆண்டு சுப்பர் சொனிக் எப் 7 மற்றும் 1995 த கபீர் ஜெட் ரக விமானம் நாட்டுக்கு கொண்டு வர பிரதானியாகவும், கபீர் ஜெட் விமான படையின் கட்டளை அதிகாரியாகவும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பதவி நியமணத்துக்கு பின்னர் விமானப்படை தளபதிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நினைவு சின்னம் பறிமாற்றிக் கொள்ளப்பட்டது.