Home Breaking News பெப்ரவரியில் நாடு திரும்பியவருக்கு இன்று கொரோனா- காரணம் என்ன?

பெப்ரவரியில் நாடு திரும்பியவருக்கு இன்று கொரோனா- காரணம் என்ன?

புத்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளி ஒருவர் இவ்வருடம் பெப்ரவரி மாதத்தில் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர் என தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் சுகாதார அலுவலர் இதை கூறியுள்ளார்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர் புத்தளம் – வெட்டுகுளம் பகுதியில் வசிப்பவர் என்றும் தெரியவந்துள்ளது.

இவர் பெப்ரவரி 27 அன்று நாட்டிற்கு வந்ததாக புத்தளம் நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் என்.சுரேஷ் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நபர் எவ்வாறு வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -