பேலியகொடையில் மீன் வர்த்தகர்களுக்கு கொரோனா எப்படி பரவியது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மீனவர்களுக்கு ரூபாய் நோட்டுகள் மூலம் வைரஸ் பரவியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பேலியகோடை கொத்தணி தொடங்கியதில் இருந்து 13 நாட்களில் 5,513 வழக்குகள் நாட்டில் பதிவாகியுள்ளன.
B.1.42 என்ற கொரோனா வைரஸ் பேலியகொடை மீன் சந்தையில் ரூபாய் நோட்டுகள் மூலம் பரவியுள்ளதையும், மீன் சந்தையில் கூச்சலிடும் வர்த்தகர்களின் உமிழ்நீர் மூலமாகவும் பரவியது என்பதை உறுதிப்படுத்தியது.
சுகாதார மற்றும் பாதுகாப்புப் படையினரின் கூட்டு விசாரணையில் இவ்விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.