கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 3 முகாம்களை தனிமைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் களனி, களுபோவில மற்றும் இராஜகிரிய ஆகிய பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம்களையே இவ்வாறு தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 56 பேர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் 183 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது