சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களைக் கண்டறிய மட்டக்களப்பு நகரில் இராணுவத்தினரும் பொலிசாரும் பல முக்கிய இடங்களில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
முகக்கவசம் அணியாத பலர் இந் நடவடிக்கையின் போது மடக்கிப் பிடிக்கப்பட்டு அவர்களது முழுத் தகவல்களும் பொலிசாரினால் திரட்டப்பட்டன.
பல இடங்களில் பொலிசார் வாகனங்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் நாளாந்தம் இனங்காணப்பட்டு வருவதையடுத்து சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கபட்டுள்ளன.