தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களின் செயற்பாடுகளும் இன்று(புதன்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விவசாய அமைச்சின் செயலாளர், மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
இரத்மலானை, ஹோகந்தர, மீகொட, வெயாங்கொடைத மற்றும் நாரஹேன்பிட்டிய பொருளாதார மத்திய நிலையங்களின் செயற்பாடுகளே இவ்வாறு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த மத்திய நிலையங்களில் சில்லறை வியாபாரங்கள் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.