பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் இந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் 4 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 30 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருவர் வெளியே சென்றால் ஒருவர் வைல்ட் கார்டாக உள்ளே செல்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன் ஆகிய இருவர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் அர்ச்சனா, சுசித்ரா என இரண்டு பேர் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். அர்ச்சனா இரண்டாவது வாரம் வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.
சுச்சி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி வேற லெவலில் சென்று கொண்டிருக்கிறது. முழு நிகழ்ச்சியை சரியாக பார்த்து விட்டு ஒவ்வோருவருக்கும் ரிவ்யூ கொடுத்தார் சுச்சி. சிலரை பழைய ஃபார்முக்கு வாங்க என கொம்பு சீவி விட்டார்.
இதனால் பிக்பாஸ் வீடு பற்றிக் கொண்டு எரிகிறது. ஆளாளுக்கு தங்களின் இருப்பை பதிவு செய்ய கிடைக்கும் வாய்ப்பில் சண்டை போடுவது, பஞ்சாயத்து செய்வது என ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
சிலர் சின்ன விஷயத்தையுத் பெரிதுபடுத்தி கண்ணீர் விடுவது கதறுவது என இருந்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் கூடவே இருந்து குழிப்பறித்து விளையாடுகிறார். எல்லோருடனும் கூட்டு சேர்ந்து அவர்களை குழப்பி விட்டு கடைசியில் அவர்களுக்கு எதிராகவே வேட்டு வைக்கிறார் பாலாஜி.
சிலர் அவர் பிரமாதமாக ஆடுவதாக கருத்து கூறினாலும் பலரும் இப்படி ஒரு கேவலமான போட்டியாளரை எந்த பிக்பாஸ் சீசனிலும் பார்த்ததே இல்லை என கூறி வருகின்றனர். டபுள் கேம் ஆடுவதிலும் கொளுத்தி போடுவதையும் சிறப்பாக செய்கிறார் பாலாஜி.
ஏற்கனவே கடந்து வந்த பாதை டாஸ்க்கில் தனது அப்பா அம்மா குடிகாரர்கள், தனக்கு சாப்பாடு கூட போட மாட்டார்கள் என கதறினார். அப்பா நள்ளிரவில் குடி போதையில் பெல்ட்டால் அடிப்பார். அம்மா குடித்துவிட்டு மட்டையாகிவிடுவார் என்று அள்ளிவிட்டார்.
இதனால் பாசத்துக்கும் அன்புக்கும் ஏங்கியவன் நான் என அடித்து விட்டார். அவரது பேச்சை பார்த்த பலரும் கண்ணீர் விட்டனர். ஆனால் அடுத்த ஒரு சில நாட்களிலேயே அவர் சொன்னது அத்தனையும் பொய் என தகவல் பரவியது. மேலும் பாலாவின் பேச்சால் அவரது பெற்றோர் ரொம்பவே அப்செட்டாக இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பாலாஜி. அதாவது நேற்று முன்தினம் எபிசோடில் சனம் ஷெட்டிக்கும் பாலாஜிக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. அப்போது சனம் ஷெட்டி பாலாஜியை மரியாதையாக பேசிய போதும் பாலாஜி வரம்பு மீறினார்.
சனம் ஷெட்டியை ஏய் தறுதலை என்று அழைத்ததோடு அவளே இவளே என்றும் தரக்குறைவாக பேசினார். நீ பெரிய இவளா என்றும் மல்லுக்கு நின்றார். சனம் ஷெட்டியை அடிக்க பாய்ந்தார்.
சனம் ஷெட்டி உன்னை விட வயதில் மூத்தவர் என்ற போதும் அதையெல்லாம் கேட்காத பாலாஜி, சனம் ஷெட்டியை தாக்குவது போல் எகிறினார். இதனை தொடர்ந்து பாலாஜி மற்றும் சனம் ஷெட்டி ஆகிய இருவரும் சமூக வலைதளங்களில் ட்ரென்ட்டாயினர்.
சனம் ஷெட்டியிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட பாலாஜியை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் பாலாஜி இந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 2வில் மும்தாஜ் மற்றம் டேனியிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட மகத் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். கடந்த சீசனில், பேருந்தில் எப்போதோ சென்ற போது பெண்களை உரசியதாக கூறிய சரவணனும் பிக்பாஸ் வீட்டில் இருந்து கண்கள் கட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் தேசிய தொலைக்காட்சியில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக வரும் வாரத்தில் பாலாஜியை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து மேலும் ஒரு ஆண் போட்டியாளரை பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்ட் என்ட்ரியாக கொண்டு வரவும் நிகழ்ச்சி குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சீரியல் நடிகரான முகமது ஆசிம் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.