Home International வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்தார் மரடோனா!

வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்தார் மரடோனா!

அர்ஜென்டிவின் பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் டியாகோ மரடோனா வெற்றிகரமாக மூளை அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்று அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார்.

60 வயதான மரடோனா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, திங்களன்று ஆஜர்ஜென்டினாவின் தலைநகரான புவெனஸ் ஐரிஸில் உள்ள சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு பின்னர், பிளாட்டாவில் உள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அதன் பின்னர் மரடோனாவின் மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவுக்க வெற்றிகரமாக அறுவை சிகிச்‍சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மாரடோனா, நான்கு உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடியுள்ளார்.

1986 இல் மாரடோனா தலைமையிலான அர்ஜென்டினா அணி உலக கிண்ணத்தை வென்றது. அப்போட்டியின் சிறந்த வீரராகவும் தேர்வான அவர், அர்ஜென்டினா அணிக்காக 91 போட்டிகளில் விளையாடி 34 கோல்களை அடித்துள்ளது.El6 uy7W0AEqq1K

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -