Home Srilanka Covid-19 தொற்றினால் நேற்று உயிரிழந்தவர்கள் தொடர்பான முழுமையான விபரம்!

Covid-19 தொற்றினால் நேற்று உயிரிழந்தவர்கள் தொடர்பான முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரண்டு மரணங்கள் பதிவாகின.

கொழும்பு – 15 ஐச் சேர்ந்த 61 வயது பெண் ஒருவர், தனது வீட்டில் நேற்று முன்தினம் மரணித்தார் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் உயிரிழந்ததையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்த 22 ஆவது நபராக அவரது மரணம் பதிவாகியுள்ளது.

குறித்த பெண் காய்ச்சல், இருமல், தொண்டை வலி முதலான நோய் தன்மைகளினால் பாதிக்கப்பட்டிருந்தாக பிரேத பரிசோதனைகளில் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், கொட்டாஞ்சேனை – ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர், கடந்த முதலாம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், மரண பரிசோதனையின்போது மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டது.

அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொருவர் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அந்த குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண், கொரோனா நோயால் ஏற்பட்ட நிமோனியாவினால் உயிரிழந்ததாக அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த பெண்ணின் மரணம் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் 24 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கடந்த 27ஆம் திகதி கொரோனா தொற்று காரணமாக மூன்று உயிரிழப்புக்கள் பதிவாகின. இந்த நிலையில், நேற்றைய நாளில் இரண்டு உயிரிழப்புகள் அறிக்கையிடப்பட்டன.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றினால் நாளொன்றில் அதிகமான உயிரிழப்புகள் பதிவான இரண்டாவது நாளாக நேற்றைய நாள் அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -