Home Srilanka கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகம் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அலுவலக பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், 30 அலுவலக பணியாளர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய பணியாளர்களுக்கும் PCR பரிசோதனைகளை மேற்கொண்டதன் பின்னரே, மத்திய தபால் பரிமாற்றகத்தை மீள திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன கூறியுள்ளார்.

இதேவேளை, கேகாலை மாவட்டத்தில் 151 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்டத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பத்மகுமார் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாவனெல்ல பகுதியில் அனுமதியின்றி திருமண நிகழ்வொன்று நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுமண தம்பதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில், இருவருக்கும் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இருவருடன் தொடர்புகளை பேணிய 120 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்டத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ளார்.

கேகாலை மாவட்டத்தில் இதுவரை 32,031பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்டத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பத்மகுமார் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -