Home Srilanka மட்டக்களப்பில் 3 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பில் 3 பேருக்கு கொரோனா!

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் அதிகாரித்து வரும் நிலையில், நேற்று (4) மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்புபட்டவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு அவர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாக சுகாதாரவைத்திய அதிகாரி எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 375 குடும்பம் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரைக்கும் 395 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நேற்று புதன்கிழமை மாலை அடையாளம் காணப்பட்ட இருவரில் ஒருவர் ஏற்கனவே பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இரண்டாம் முறை பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர் என்றும், மற்றையவர் முதன் முறையாக பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டவர் என்றும் இவர்கள் வாழைச்சேனை மற்றும் பிறைந்துறைச்சேனை பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, எறாவூர் பகுதியில் ஒருவர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

இதன்படி இதுவரை மட்டக்களப்பில் 44 பேரும், திருகோணமலையில் 13 பேரும், கல்முனையில் 18 பேரும், அம்பாறையில் 6 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பஸ்களில் பயணம் செய்வோருக்கான பொலிஸாரின் அறிவித்தல்!

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -