Home Srilanka யாழ் கரவெட்டி பிரதேசத்தில் 3பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ் கரவெட்டி பிரதேசத்தில் 3பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கா.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இரண்டு பெண்களும் ஒரு சிறுவனுக்குமே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மூவரும் பேலியகொடை மீன் சந்தை பகுதிக்கு சென்று வந்ததன் காரணமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறுபவரின் உறவினர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மூவரும் ஒருவாரத்துக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கா.சத்தியமூர்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மூவருக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தென்பகுதியை சேர்ந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு இன்னும் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கா.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -