கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நோய்த் தொற்றாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஐ.டி.எச் மருத்துவமனையிலும் சில தனிமைப்படுத்தல் முகாம்களிலும் பரீட்சை நடாத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக 362824 பேர் பரீட்சைக்காக விண்ணப்பம் செய்திருந்ததுடன் 2648 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடாத்தப்பட்டு வருகின்றது.
கொவிட்-19 நோய்த் தொற்று அபாயத்திற்கு மத்தியிலும் வெற்றிகரமாக பரீட்சைகளை நடாத்த முடிந்தது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்ரோபர் மாதம் 12ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைகள் இன்றைய தினத்துடன் முடிவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.