Home Srilanka மன்னாரில் மறைத்து வைக்கப்பட்டு 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூள்!

மன்னாரில் மறைத்து வைக்கப்பட்டு 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூள்!

மன்னார் நகரில் உள்ள சில பல்பொருள் விற்பனை நிலையங்களில் மஞ்சள் தூள் மறைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றதாகவும், விலை தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது மன்னார் நகரில் உள்ள சில பல்பொருள் விற்பனை நிலையங்களில் மஞ்சள் தூள்100 கிராம் 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அதற்கு அமைவாக 1 கிலோ மஞ்சள் தூள் 4 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதேவேளை,நாளுக்கு நாள் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே மன்னாரில் மஞ்சள் தூளின் விலை கட்டுப்பாடின்றி காணப்படுகின்றது.உரிய அதிகாரிகள் குறித்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி கட்டுப்பாட்டு விலையுடன் விற்பனை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக மன்னார் ஊடாக கடத்தி வரப்படுகின்ற மஞ்சள் கட்டிகள் மன்னாரில் உள்ள வர்த்தகர்கள் சிலருக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அதனை குறைந்த விலைக்கு பெற்று மஞ்சள் கட்டியினை மஞ்சள் தூளாக்கி அதி கூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -