Home Srilanka யாழில். வீதி திருத்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி உயிரிழப்பு!

யாழில். வீதி திருத்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி உயிரிழப்பு!

வடமராட்சி முள்ளி பகுதியில் வீதி திருத்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி றோலரருக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

பனாங்கொடை பகுதியை சேர்ந்த எஸ்.பி. பிரேமரட்ன (வயது 62) எனும் நபரே உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி – கொடிகாமம் வீதி திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. குறித்த பணியில் தொழிலாளி ஈடுபட்டிருந்த போது , பணியில் ஈடுபட்டிருந்த றோலருக்குள் சிக்குண்டு, படுகாயமடைந்துள்ளார்.

அதனை அடுத்து சக தொழிலாளர்கள் அவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -