Home Srilanka வீதி உடைப்பெடுக்கும் நிலையில் பூச்சிக்கூடு வீதி – யாரும் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு

வீதி உடைப்பெடுக்கும் நிலையில் பூச்சிக்கூடு வீதி – யாரும் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 16ம் கிராமம் பூச்சிக்கூடு வீதியானது உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அவற்றினை திருத்தி தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ் வீதிக்கு அருகாமையில் மூங்கிலாறு (ஆண்டலோயா) ஆறானது ஊடறுத்துச் செல்கின்றது.

கடந்த சில வருடகாலமாக இவ் வீதியானது புனரமைக்கப்படாது உள்ளதால் இவ்வீதியினால் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகனச்சாரதிகள் நாளாந்தம் மிகுந்த அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.

அண்மைக்காலமாக இவ் ஆற்றில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெற்ற காரணமாக இந்த வீதியானது நீரினால் அடித்துச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பூச்சிக்கூடு உட்பட பல கிராமங்களில் உள்ள தமிழ் -சிங்க மக்கள் குறித்த வீதியை பயன்படுத்திவருகின்றனர்.இந்த வீதியூடாகவே வெல்லாவெளி மற்றும் ஏனைய இடங்களுக்கு மக்கள் பயணம் செய்துவருகின்றனர்.

குறித்த பகுதியான விவசாயிகள் உள்ள பகுதி என்பதன் காரணமாக தமது உழவு இயந்திரங்களை கொண்டுசெல்லும்போது உடைப்பெடுத்த பகுதியால் செல்லமுடியாத காரணத்தினால் விவசாயிகளின் நிலங்கள் ஊடாகவே கொண்டுசெல்லும் நிலையுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதியால் பாடசாலை மற்றும் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீதியால் பாரிய உடைப்பு காணப்படுகின்றதாகவும் தற்போது மழை காலம் ஆரம்பமாகவுள்ளதனால் ஆற்றில் நீர் மட்டம் அதிகரிக்கும்போது பாதை முற்றாக உடைக்கப்பட்டு ஆற்று வெள்ள நீர் விவசாய நிலங்களையும் அழிக்கும் நிலையேற்படும் எனவும் அவர்கள் தெரிவிதக்கின்றனர்.

குறித்த வீதியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளபோதிலும் அம்பாறை மாவட்ட நீர்பாசன திணைக்களத்திற்குரிய வீதியாக காணப்படும் நிலையில் அவற்றினை பலமுறை அவர்களிடம்கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் இதற்கு பொறுப்பான அம்பாரை மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள உயரதிகாரிகள் மற்றும் பலருக்கும் அறிவித்தும் அவர்கள் இதனை பார்வையிட்டும் எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் மிக விரைவில் இதனை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் மட்டும்வந்து தமக்கான உறுதிமொழிகளை வழங்வதாகவும் தேர்தல் முடிந்தால் தங்களது பகுதிக்கு வருவதில்லையெனவும் இந்த வீதி தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனா.

இது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகியிடம் கேட்டபோது,குறித்த வீதி தொடர்பில் அம்பாறை மாவட்ட நீர்பாசன திணைக்கள பொறியியலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதுடன் இந்த வருடம் அரசாங்கத்தின் நீர்பாசனத்தின் ஊடாக செழுமை திட்டத்தின் ஊடாக குறித்த வீதியில் சிதைவடைந்துள்ள அணைக்கட்டினை புனரமைப்பதற்கான முன்மொழிவினை மாவட்ட செயலகத்திற்கு முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

IMG 8267IMG 8279IMG 8342IMG 8315

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -