Home Srilanka கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரு மீற்றர் சமூக இடைவெளி போதுமானதல்ல

கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரு மீற்றர் சமூக இடைவெளி போதுமானதல்ல

கொரோனா வைரஸ் தொற்று பரவுகையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரு மீற்றர் சமூக இடைவெளி போதுமானதல்ல என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 நோய்த் தொற்றின் அண்மைய செயற்பாடுகளை அவதானிப்பதன் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தபட்சம் ஒன்றரை மீற்றர் அல்லது இரண்டு மீற்றர் சமூக இடைவெளி அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய வைரஸ் தொற்றின் வீரியம் காரணமாக இவ்வாறு சமூக இடைவெளியை அதிகரிக்குமாறு நிபுணர்கள் கோருவதாகத் தெரிவித்துள்ளார்.

அம்மை நோய் ஏற்படும் போது வீட்டில் தனித்திருப்பது போன்று கொவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டாலும் தனித்து இருந்தால் பரவுகையை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதர்களின் செயற்பாடுகளின் அடிப்படையிலேயே நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்துதல் தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -