மேல் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நாளை தளர்த்தப்படவுள்ள நிலையில் அனைத்து அலுவலக ரயில்களையும் நாளை முதல் இயக்கப் போவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படாத பகுதிகளில் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது புகையிரத பொது முகாமையாளர் டிலந்தா பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பஸ் சேவைகளும் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், தனிமைப்படுத்தல் பகுதிகளில் பஸ்களும் நிறுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.