Home Spiritual பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட யாக பூசை!

பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட யாக பூசை!

செ.துஜியந்தன்

பாண்டிருப்பு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி விசேட பிரார்த்தனைபூசை வழிபாடு இன்று (08) சிவஸ்ரீ நல்லராசா குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

பிரதமர் மகிந்தராஜபக்ஷவின் புத்தசாசன மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுடன் நாடு முழுவதுமுள்ள இந்து ஆலயங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பிரார்த்தனை பூசை வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.

இதற்கமைய பாண்டிருப்பு ஸ்ரீ சித்தரவேலாயுத சுவாமி ஆலயத்தின் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் இன்று விசேட மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் விசேட வழிபாடுகள் நடைபெற்றது. இதன்போது நாட்டையும், நாட்டு மக்களையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு சிவஸ்ரீ நல்லராசா குருக்களினால் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற இவ் மஹாயாக பூசையில் ஆலய நிர்வாக சபையினர், குறைந்தளவிலான பக்கதர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.p1 p3 p2

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -