Home Srilanka உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி!

உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடையும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார்.

நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் இது தொடர்பாக எடுத்துரைத்தபோதே, உடல்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதியால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை முதல் கட்டமாக மன்னார் பிரதேசத்தில் இடமொன்றை ஒதுக்கி அடக்கம் செய்வதற்கு ஆராயப்பட்டு வருகின்றது.

மேலும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியானதன் பின்னரே இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -