கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக சிலோன் தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ஜயறுவன் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இத் தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் சிலோன் தவ்ஹீத் ஜமாத் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.