பெரும்போக நெற்பயிர்ச் செய்கைக்கு தேவையான உரங்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச தேசிய உர விநியோகிக காரியாலய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அலரிமாளிகையில் இடம்பெற்ற விவசாய நடவடிக்கைகளுக்கான உர இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விவசாய பயிர் செய்கைக்காக இவ்வருடத்திற்கு மாத்திரம் 708,910 மெற்றிக் தொன் உரம் தேவைப்பட்டுள்ளது.
இதில் பெரும்போக விளைச்சலுக்கு 214 இலட்சம் மெற்றிக் தொன் உரம் தேவைப்பட்டுள்ளது. 51797 மெற்றிக் தொன் உரம் இதுவரையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பயிர்செய்கைக்கான உரம் அரச நிறுவனங்களிடமிருந்து 10 சதவீதமும், தனியார் துறையினரிடமிருந்து 90 சதவீதமும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உரங்களை இறக்குமதி செய்தல் மற்றும் விநியோகம் செய்தல் ஆகியவற்றில் காணப்படும் சிக்கல் நிலை குறித்து ஆராயப்பட்டது.
அடுத்த வருடத்தில் பெரும்பாகம் மற்றும் சிறுபோக விவசாய பயிர் செய்கைக்கு தேவையான உர விநியோகம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீர்பாசன வழிமுறை தொடர்பில் நிலையான செயற்திட்டங்களை துறைசார் அடிப்படையில் தயாரிக்குமாறு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.