Home Srilanka சந்திரகாந்தன் மீதான வழக்கு எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைவைப்பு!

சந்திரகாந்தன் மீதான வழக்கு எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைவைப்பு!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.

சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாசன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் பிள்ளையான் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்க வேண்டாம் என அரச தரப்பு சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்ட வாதம் நிராகரிக்கப்பட்டதுடன், சிறைச்சாலை ஆணையாளர் அனுமதி வழங்கினால் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் எனவும் நீதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.700.160.90 1 1 625.0.560.320.160.600.053.800.700.160.90 2 625.0.560.320.160.600.053.800.700.160.90 3 625.0.560.320.160.600.053.800.700.160.90 4 625.0.560.320.160.600.053.800.700.160.90 5 123921499 4693156484088082 740372031825580267 n 123955516 744809313138964 8328981397597353334 n 124817884 758770844707514 130523254137045798 n

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -