Home Srilanka தனியார் பேருந்து சேவை உரிமையாளர்களுக்கு கட்டணத் தள்ளுபடி - அமைச்சரவை அங்கிகாரம்!

தனியார் பேருந்து சேவை உரிமையாளர்களுக்கு கட்டணத் தள்ளுபடி – அமைச்சரவை அங்கிகாரம்!

மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சேவை உரிமையாளர்களுக்கு பல்வேறு கட்டணத் தள்ளுபடியை வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி – அனுமதிப்பத்திரத்தை புதுப்பிபதற்கான கட்டணங்கள் (Permit updating charges), தாமதக் கட்டணங்கள் (Delay charges), ஒப்பந்தக் கட்டணங்கள் (Tender charges), பதிவுப் புத்தகத்துக்கான கட்டணங்கள் ( Log book charges), அனுமதிப்பத்திரத்துக்கான ஒப்புதல் கட்டணங்கள் (Access permit charges), அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு தற்காலிக அனுமதி வழங்கல் கட்டணங்கள் (Temporary permit charges for the expressways), ஆகியற்றை நீக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தனியார் பேருந்து சேவை உரிமையாளர்களிடம் அறவிடப்படும் குறித்த கட்டணங்களை அறவிடாமலிருக்க மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை இந்த வருட இறுதி வரை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -