Home Srilanka நட்சத்திர ஹோட்டலில் நடந்த இரகசிய திருமணத்தால் சர்ச்சை!

நட்சத்திர ஹோட்டலில் நடந்த இரகசிய திருமணத்தால் சர்ச்சை!

யுக்ரேன் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்களை தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்ட விருந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

5 நட்சத்திர ஹோட்டல்களில் சட்டவிரோதமான முறையில் விருந்து நடத்தியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தங்கள் சங்கத்திடம் சாட்சிகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட யுக்ரேன் விமான ஊழியர்கள் மூலம் இலங்கையில் கொரோனா பரவல் ஏற்பட்டதாக இதுவரையில் சந்தேகம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த விருந்துகள் தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு விசாரணை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான ஊழியர்களை தனிமைப்படுத்த வழிக்காட்டல்கள் வெளியிடப்பட்ட போதிலும் தங்கள் சங்கத்தின் ஊழியர்களுக்கு தெரியாமல் இரகசியமாக விருந்து நடத்தியுள்ளதாக தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த குற்றச்சாட்டினை குறித்த ஹோட்டல் முகாமையாளர் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -