Home India பாம்பன் பழைய ரயில் பாலத்தில் மோதிய ராட்சத மிதவை கிரேன்!

பாம்பன் பழைய ரயில் பாலத்தில் மோதிய ராட்சத மிதவை கிரேன்!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலத்தில் ராட்சத மிதவை கிரேன் மோதிய நிலையில் பாலத்தைக் கடக்க வந்த சேது விரைவு ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலப் பணிக்காக மிதவைகள் போடப்பட்டு ராட்சத கிரேன், துளையிடும் ராட்சத கருவிகள், ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகத்தால் ராட்சத மிதவை கிரேன் ஒன்று பழைய ரயில் பாலத்தில் மோதியதில் கிரேன் ரோப் அறுந்து விழுந்தது.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வந்த சேது விரைவு ரெயில் 210 பயணிகளுடன் பாலத்தின் நுழைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டது.1604982708127251

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -