அனுராதபுர மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 37 நீர்த்தேக்கங்களில் கிட்டத்தட்ட 18 மில்லியன் மீன் குஞ்சுகளை அரசாங்கம் விடுவிக்கவுள்ளது.
இவ்வாறு விடப்படவுள்ள மீன் குஞ்சுகளில் அலங்கார மீன், நன்னீர் மீன் மற்றும் இறால் ஆகியவை அடங்கும் என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று கிராமப்புற பொருளாதார வளர்ச்சி குறித்து நடைபெற்ற கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் இது குறித்து குறிப்பிட்டுள்ளார்.