Home Srilanka அவசர நோயாளர் காவு வண்டி சேவையை நாடுபவர்களுக்காக தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

அவசர நோயாளர் காவு வண்டி சேவையை நாடுபவர்களுக்காக தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

அவசர நோயாளர் காவு வண்டி சேவையை நாடுபவர்களுக்கு தொலைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண இதனை அறிவித்துள்ளார்.

இந்த சேவை குறிப்பாக கொரோனா தொற்று அச்சம் காரணமாக முடக்கப்பட்ட பகுதிகளில் குழந்தைகள், தாய்மார் உள்ளிட்டோருக்கு நோய் ஏற்பட்டால் அவர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்லும் நோக்குடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 0113422558 என்ற அவசர தொலைப்பேசி இலக்கமே அறிவிக்கப்பட்டுள்ள அவசர தொலைபேசி இலக்கமாகும்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவிப்புக்கமைய, இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -