உலகலாவிய ரீதியில் சவாலக இருக்கின்ற கொரோனா மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் வந்திருக்கின்றது இதனை அரச கொள்கையின் அடிப்படையில் கையாண்டு சாதாரண மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தியை அதிகரிக்க கூடிய விடயங்களையும் எப்படி முன்னெடுப்பது என்ற பொதுவான கொள்கைத் திட்டத்திற்கு உழைக்கவேண்டும் என மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருக்கான காரியாலயம் மாவட்ட செயலகத்தில் இன்று திறந்துவைத்து கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக இந்த பொறுப்பை ஏற்றுள்ளோன். இந்த இடத்திற்கு வருவதற்கு பெரும் பங்காற்றிய எனது மக்களுக்கு நன்றி, தேர்தல் காலங்களில் மக்களிடம் அபிவிருத்தி செய்து தருவாக வாக்குறுதியளித்து தான் இந்த இடத்துக்கு வந்திருக்கின்றோம் .
தற்போது உலகலாவிய ரீதியில் சவாலக இருக்கின்ற கொரோனா மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் வந்திருக்கின்றது இந்த விடயங்களை அரச கொள்கையின் அடிப்படையில் கையாண்டு சாதாரண மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் அவர்களுடைய உற்பத்தியை அதிகரிக்க கூடிய விடயங்களையும் எப்படி முன்னெடுப்பது என்ற பொதுவான கொள்கைத் திட்டத்திற்கு உழைக்கவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.
அந்த அடிப்படையில் கொரோனா தொற்றைத் தடுத்து மக்களை பாதுகாத்துக்கொண்டு அதனோடு எங்களுடைய கிராமிய பொருளாதாரத்தை வளர்தெடுப்பது எங்கள் நோக்கம் அந்த திட்டத்திற்கு அனைவரது ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.
நீண்ட காலமாக நான் நிர்வாகத்துடன் தொடர்பு இல்லாத காரணத்தால் இன்று கடமைகளை பெறுப்பேற்ற உடன் நிலமைகளை அவதானித்துக் கொண்டு நாளை 13ஆம் திகதி பெரும் விமர்சனத்தில் மத்தியில் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தை நடாத்தவுள்ளோம் .
அந்த கூட்டத்தில் முடிந்த வரை 2021ஆம் ஆண்டிற்கான செயற்பாடுகளையும் இப்போது இருக்கின்ற மக்களுக்கு உடனடி தேவையான விடயங்களை அவதானித்து அதனை முடித்து கொடுப்பதற்கான திட்டங்களை வகுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.