2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை 21 நாட்களுக்கு விவாதிக்க பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் எதிர்வரும் 17 ஆம் திகதி பிற்பகல் நிதியமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவினால் சபையில் முன்வைக்கப்படும்.
சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நவம்பர் 18 முதல் 21 வரையும் மூன்றாம் வாசிப்பை நவம்பர் 23 முதல் டிசம்பர் 10 வரை நடத்துவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு திட்டமிடப்பட்டுள்ளது.