Home Breaking News தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் CID யினரால் கைது!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் CID யினரால் கைது!

P.Prashanthan 1

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் அவர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரின் மட்டக்களப்பு கிளை அதிகாரிகளினால் சற்று முன்னர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.

ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை வழக்கு தொடர்பான சாட்சிகளை அச்சுறுத்தியதாக நேரடியாக கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு சாட்சியொருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய பிரசாந்தன் அவர்களை மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளார்கள்.

தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -