Home Srilanka நாட்டில் இதுவரை 5 கொரோனா மரணங்களே பதிவாகியுள்ளன- சவேந்திர சில்வா!

நாட்டில் இதுவரை 5 கொரோனா மரணங்களே பதிவாகியுள்ளன- சவேந்திர சில்வா!

இலங்கையில் இது வரை 5 கொரோனா மரணங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் சுகாதார அமைச்சின் செயலாளர் இதை உறுதிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகள் வீடுகளில் இறப்பது தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருதுத்துத் தெரிவித்த அவர்,

இலங்கையில் ஒரு சிறந்த சுகாதார சேவை உள்ளது என்பதை யாரும் மறைக்கவோ அல்லது மருத்துவ சிகிச்சை பெறுவதைத் தவிர்க்கவோ கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எமது நாட்டில் 5 இறப்புகள் மாத்திரமே கொரோனாவால் ஏற்பட்டவை எனவும் ஏனைய அனைத்தும் நாட்பட்ட நோய்களால் ஏற்பட்டவை எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஊரடங்கு மற்றும் முடக்கல் நிலைகளின் போது வீடுகளில் தங்கியிருக்காது தேவையான போது மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முடக்கல் நிலையில் இருக்கும் போதுகூட அவசர மருத்துவ தேவைகள் தேவைப்படுவோர் அம்புலன்சில் மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய ஒரு பொறிமுறையை தாங்கள் நிறுவியுள்ளோம் எனவும்தெரிவித்துள்ளார்.

வைரஸ் பாதித்த அனைவருமே இறந்துவிட மாட்டார்கள் என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் நேர்மறை சோதனை செய்யப்பட்டவர்களில், 0.2 சதவீதம் பேர் கொரோனா காரணமாக இறந்தனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -