Home Srilanka முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமானது- நீதியமைச்சர் பதிலடி!

முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமானது- நீதியமைச்சர் பதிலடி!

கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யக் கோருவதானது நாட்டின் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்துவது அல்ல என்றும், இது அவர்களின் நியாயமான கோரிக்கை என்றும் நீதியமைச்சர் மொஹமட் அலி சப்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் பேசியதாவது,

அயல் நாடான இந்தியா உட்பட உலகில் உள்ள 189 நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இறக்கும் நபர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

உலக சுகாதார அமைப்பும் இதனை அங்கீகரித்துள்ளது. எனவே முஸ்லிம் மக்களின் இந்த கோரிக்கையானது நாட்டின் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்துவது அல்ல. இது அவர்களின் நியாயமான கோரிக்கை.

முஸ்லிம் மக்களின் இந்த கோரிக்கையை அடிப்படையாக கொண்டு சிலர் அரசியல் லாபம் பெற முயற்சித்து வருகின்றனர். மேலும் சிலர் முஸ்லிம் மக்களை அடிப்படைவாதிகள் என முத்திரை குத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனவும் அமைச்சர் அலி சப்றி குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோயால் இறக்கும் நபர்களை அடக்கம் செய்யாமல் தகனம் செய்ய வேண்டும் என்ற சுற்றறிக்கையை முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளரை் அனில் ஜாசிங் வெளியிட்டிருந்தார். இதனடிப்படையிலேயே கொரோனா காரணமாக இறக்கும் நபர்களின் இறுதி கிரியைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறக்கும் முஸ்லிம்களை தமது மத முறைப்படி அடக்கம் செய்ய இடமளிக்குமாறு முஸ்லிம் மத தலைவர்கள் அரசாங்கத்திடம் பல முறை கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கி இருப்பதாக சிலோன் தவ்ஹித் ஜமாத் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.

முஸ்லிம் மக்களின் இந்த கோரிக்கையை அரசாங்கம் எதிர்க்கவில்லை என சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க கூடாது என்றும், தகனம் செய்ய வேண்டும் என்றும் ஆளும் தரப்பினர் கடுமையாக எதிர்க்கும் நிலையிலேயே நீதியமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -