Home Srilanka களுவாஞ்சிகுடியில் ஆலயங்கள், பாடசாலைகளில் டெங்கு பரிசோதனை!

களுவாஞ்சிகுடியில் ஆலயங்கள், பாடசாலைகளில் டெங்கு பரிசோதனை!

செ.துஜியந்தன்

களுவாஞ்சிகுடி சுகாதாரபணிமனைக்குட்பட்ட கிராமங்களில் அமைந்துள்ள ஆலயங்கள், பாடசாலைகள், பொதுஇடங்களில் இன்று(13) டெங்கு ஒழிப்பு பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

களுவாஞ்சிகுடி மேற்பார்வை பொதுச்சுகாதாரப்பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் பிரதேச பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களான கே.இளங்கோவன், எஸ்.ஜீவிதன், எஸ்.சிவசுதன் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு ஒழிப்பு பிரிவினர் இவ் டெங்குப் பரிசோதனையில் ஈடுபட்டனர்.

தற்போது இங்கு மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் எதிர்வரும் நாட்களில் பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் இருப்பதை கருத்தில் கொண்டு தொடர்ச்சியாக டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும், குறிப்பாக இங்குள்ள ஆலயங்கள் மற்றும் பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாகவும் ஆலயநிர்வாக சபையினர், பாடசாலை சமுகத்தினர் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் தவறும் பட்சத்தில் வழக்குதாக்கல் செய்யப்படும் என பிராந்திய சுகாதாரப்பணிமனை எச்சரிக்கைவிடுத்துள்ளது.d1 d2

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -