Home Spiritual நாவிதன்வெளி மத்தியமுகாம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் தொற்றிலிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி விசேட பிரார்த்தனை...

நாவிதன்வெளி மத்தியமுகாம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் தொற்றிலிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி விசேட பிரார்த்தனை வழிபாடு!

செ.துஜியந்தன்

பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ தி.கு.தேவகுமார் குருக்கள் தலைமையில் அதிகாலை 05.30 மணிக்கு நடைபெற்றதுடன்

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீசன் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திரு. எஸ். ரங்கநாதன், உதவிப்பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா, நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன் மற்றும் ஆலய தர்மகர்த்தாக்கள் , உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்n3 n2 n1

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -