Home International பதவி விலகும் முன்னர் சீனாவுக்கான ட்ரம்பின் அடுத்த அடி!

பதவி விலகும் முன்னர் சீனாவுக்கான ட்ரம்பின் அடுத்த அடி!

சீன நிறுவனங்களில் அமெரிக்க முதலீடுகளை தடைசெய்யும் ஒரு நிறைவேற்று ஆணையில் ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்கத் தேர்தலுக்குப் பின்னர் பீஜிங் மீதான அமெரிக்காவின் அழுத்தத்தை இந்த செயற்பாடானது அதிகரித்துள்ளது.

சீனாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்களான சீனா டெலிகாம் கோர்ப் லிமிடெட், சீனா மொபைல் லிமிடெட் மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் தயாரிப்பாளரான ஹிக்விஷன் உள்ளிட்ட சீனாவின் மிகப்பெரிய நிறுவனங்களை இந்த நடவடிக்கை பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சீன இராணுவத்தின் ஆதரவுடன் பாதுகாப்புத் துறையால் நியமிக்கப்பட்ட 31 சீன நிறுவனங்களின் பங்குகளை அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள், ஓய்வூதிய நிதிகள் மற்றும் பிறவற்றைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் பதவியில் இருந்து விலகுவதற்கு ஒன்பது நாட்களுக்கு முன்னர் அதாவது ஜனவரி 11 ஆம் திகதி முதல் அமெரிக்க முதலீட்டாளர்கள் தங்கள் பத்திரங்களில் எந்தவொரு பரிவர்த்தனையையும் இந்த உத்தரவு தடை செய்யும்.

சீனா பெரும்பான்மை ரீதியாக அமெரிக்காவின் மூலதனத்தை வளமாக பயன்படுத்திக் கொள்கிறது மற்றும் அதன் இராணுவம், உளவுத்துறை மற்றும் பிற பாதுகாப்பு எந்திரங்களின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலை செயல்படுத்தவும் இவை உதவுகிறது என்று வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த தடையுத்தரவானது உலகின் மிகப்பெரிய பொருளாதார பலம் கொண்ட இரு நாடுகளுக்கிடையில் ஏற்கனவே இருந்த உறவு விரிசலை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை சீனா கையாளுதல் மற்றும் ஹொங்கொங்கில் பாதுகாப்பு சட்டத்தை சுமத்துவதற்கான சீனாவின் நடவடிக்கையினால் அண்மைக்காலமாக அமெரிக்கா சீனா மீது அழுத்தங்களை அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -