Home Srilanka கார்த்திகை வீரர்களின் கனவை நிறைவேற்ற இதுவே சரியான தருணம் அநுரகுமார திசநாயக்க!

கார்த்திகை வீரர்களின் கனவை நிறைவேற்ற இதுவே சரியான தருணம் அநுரகுமார திசநாயக்க!

கடந்த காலத்தில் எதிரிகளிடம் உயிர்களை இழந்த வீரர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக கட்சி வெற்றிபெற வேண்டும் என்று ஜேவிபி தலைவர் அனுர குமார திசனநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜேவிபியில் இருந்து உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் நவம்பர் 31 ம் திகதி வீரர்கள் தினத்தை குறிக்கும் நிகழ்வில் பேசிய கட்சித் தலைவர், இந்த இலக்கை அடைவதற்கான போராட்டத்தில் இறங்குவதற்கான நேரம் பொருத்தமானது என்றார்.

அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியவர்கள், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டவவர்கள், வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்கள் இன்று கருவூலத்தின் பொறுப்பில் உள்ளனர் கூறினார்.

ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சட்டத்தின் மேலாதிக்கம் ஆகியவை சமரசம் செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

ஜே.வி.பி நிறுவனர் ரோஹன விஜேவீர மற்றும் பலர் ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர், அவர்களின் நோக்கங்கள் இன்னும் நிறைவேறவில்லை என்றார்.

அரிசி விலையை கட்டுப்படுத்தத் தவறிய ஒரு அரசாங்கம் பொதுமக்களின் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கும் திறன் கொண்டதாக இருக்காது என்றார்.

அரிசி மீதான அதிகபட்ச சில்லறை விலை மற்றும் தேங்காய், பருப்பு மற்றும் ரின் மீன் போன்ற பொருட்களின் விலை தொடர்பான ஐந்து வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிட்டமை தொடர்பில், அரசாங்கத்தை கேலி செய்தார்.

குறைந்த வருமானம் ஈட்டும் பொதுமக்கள் பொருளாதாரத்தின் வீழ்ச்சியால் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்று எம்.பி. திசநாயக்க கூறினார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -