Home Breaking News யாழில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் 25 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் பேலியகொட மீன் சந்தைக்கு கூலர் வாகனம் கொண்டு சென்ற நிலையில் மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் நிலையத்தில்14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவரது மாதிரி பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வீடு திரும்பியதாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர் வீட்டிற்கு வந்ததும் நல்லூர் மருத்துவ சுகாதார அதிகாரியின் அறிவுறுத்தலில் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்போது குறித்த நபருக்கு இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

சுமார் ஒரு மாதங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந் நிலையில் குறித்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவருக்கு நாளை பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மினுவாங்கொட பகுதியில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று கொத்தணி கண்டறியப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அடையாளம் காணப்படும் 11ஆவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -